தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தினகரன்  தினகரன்
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நேற்று காலை முதல் இரவு வரையிலான காலகட்டத்தில் மத்தியப்பிரதேசத்தில் கிழக்கு பகுதி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரு சில பகுதிகளிலும் கனமழை பதிவாகி உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வடகிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு  45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மூலக்கதை