பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசு மவுனம் காப்பது ஆபத்து : பிரியங்கா காந்தி கண்டனம்

தினகரன்  தினகரன்
பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசு மவுனம் காப்பது ஆபத்து : பிரியங்கா காந்தி கண்டனம்

புதுடெல்லி: நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மந்தநிலை காணப்படுவதாக அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிருப்தி எழுந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு மற்றும் உற்பத்தி குறைப்பு, ஊழியர் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பதிவில், பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசு மவுனம் காப்பது ஆபத்து. தொழில் நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். ஆனால் பாஜ அரசு அனைத்தையும் பார்த்து கொண்டு வாய்மூடி நிற்கிறது. இந்த மிகப்பெரிய பொருளாதார மந்தநிலைக்கு காரணம் யார்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

மூலக்கதை