தமிழர்களை கொன்றவர் இலங்கை ராணுவ தளபதி

தினமலர்  தினமலர்

கொழும்பு:இலங்கை ராணுவத்தின் புதிய தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல், ஷவேந்திர சில்வா, ௫௫, அறிவிக்கப்பட்டுள்ளார்.
பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக, இவர் மீது, குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இலங்கை ராணுவத்தின் தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல், மகேஷ் சேனநாயகே உள்ளார். அவரின் பதவி காலம் முடிவடைந்ததால், புதிய தளபதியாக, ஷவேந்திர சில்வா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையின் நிரந்தர, துணை பிரதிநிதியாக உள்ளார்.இலங்கையில், 2009 ல் நடந்த, இறுதி கட்ட போரின் போது, ராணுவத்தின், 5 ௮வது படைப் பிரிவுக்கு தலைமை வகித்திருந்த சில்வா, அப்பாவி தமிழ் மக்களை தாக்கியது, மருத்துவமனைகள் மீது குண்டு வீசியது போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டவர்.இதற்காக, ஐக்கிய நாடுகள் சபையால், கண்டனத்திற்கு ஆளானவர். அவரை, ராணுவத்தின் புதிய தளபதியாக நியமித்து, அதிபர், சிறிசேனா நேற்று உத்தரவிட்டுள்ளார். இது, அந்நாட்டில் வாழும் தமிழர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சில்வா பற்றி, தமிழ் தேசிய கூட்டணியின் செய்தித் தொடர்பாளர், எம்.ஏ.சுமந்திரன் கூறும் போது, ''தமிழர்களுக்கு எதிராக, கொடூர குற்றங்களை செய்த ஒரு நபரை, இலங்கை ராணுவ தளபதியாக நியமித்துள்ளது, தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.

மூலக்கதை