ஜவஹர்லால் நேரு பல்கலைக்கு மோடி பெயரை வைக்கலாம்: டெல்லி பா.ஜ எம்.பி சர்ச்சை

தினகரன்  தினகரன்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கு மோடி பெயரை வைக்கலாம்: டெல்லி பா.ஜ எம்.பி சர்ச்சை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி பெயரை வைக்க வேண்டும் என வடமேற்கு டெல்லி பா.ஜ எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் பேசியது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஒன்றை, பாஜ.வின் மாணவர்கள் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏபிவிபி) டெல்லியில் நடத்தியது. இதில் டெல்லி பா.ஜ தலைவர் மனோஜ் திவாரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வடமேற்கு டெல்லி தொகுதியின் பா.ஜ எம்.பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் கலந்து கொண்டு பேசினார். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடியை பாராட்டி பேசினார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு (ஜேஎன்யு), பிரதமர் மோடியை பெயரை வைத்து அதை மோடி நரேந்திர பல்கலைக்கழகம்(எம்என்யு) என மாற்ற வேண்டும் என்றார்.

மூலக்கதை