போலி நபர்களை நீக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கலாம்: தேர்தல் ஆணையம் கடிதம்

தினகரன்  தினகரன்
போலி நபர்களை நீக்க வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கலாம்: தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்களை இணைப்பதற்கு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. வாக்காளர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தங்கள் பெயர்களை வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். இதை கண்டுபிடித்து ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை நீக்குவதற்காக, வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைக்க  தேர்தல் ஆணையம் திட்டமிட்டது. ஆனால், ஆதார் எண் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு, இந்த முயற்சிக்கு தடையை ஏற்படுத்தியது. இதனால், சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் கடிதம்  ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தற்போதுள்ள வாக்காளர்கள் அல்லது புதிதாக வாக்காளர் பட்டியலில் சேருபவர்களிடம் ஆதார் எண் பெறும் வகையில், மக்கள் பிரதிநிதி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளது.  இதன்  மூலம் ஆதார் எண் இணைக்கப்பட்டு நாடு முழுவதும் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவர்.

மூலக்கதை