கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் பலி: வார்டன் கைது

தினகரன்  தினகரன்
கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் பலி: வார்டன் கைது

கொப்பாள்:  கொப்பள் நகரில் ெகாடி கம்பத்தை அகற்றும் போது மின்சார கம்பி  மீது உரசியதில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் உயிரிழந்த  சம்பவம் தொடர்பாக விடுதி வார்டனை போலீசார் கைது செய்துள்ளனர்.  வட  கர்நாடகா கொப்பள்  மாவட்டத்தில் பி.சி.எம். அரசு விடுதி  இயங்கிவருகிறது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவர்கள்  தங்கி படித்து வருகின்றனர். விடுதியின் எதிரே சுதந்திர தின  விழாவுக்கு தேசிய கொடி ஏற்ற இரும்பு கம்பம் பொருத்தப்பட்டிருந்தது.  நேற்று விடுமுறை என்பதால், விடுதியில் இருந்த 5  மாணவர்கள்  கொடிக்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கொடி கம்பத்தை  அகற்றிய பின், அதை விடுதியின் மேல் பகுதிக்கு கொண்டு சென்றனர்.  அப்போது மேலே சென்றுகொண்டிருந்த மின் கம்பி மீது கொடிக்கம்பம்  உரசியது. இதனால், மின்சாரம் பாய்ந்து சந்தோஷ்(19), மகேஷ்(20),  யந்திரேஷ் நாயக்(21), ஹரிபிரசாத் மோர்ச்(21), யோகேஷ் பாட்டீல்(20)  ஆகிய 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொப்பள் நகர போலீசார் விசாரணை  நடத்தினர். பின்னர், விடுதி வார்டன் பசராஜை கைது செய்தனர். மேலும்,  மின்சாரத்துறை அதிகாரி மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது  வழக்குபதிவு  செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தலா  5 லட்சம் முதல்வர் எடியூரப்பா உத்தரவு:கொப்பள்  விடுதியில் 5 மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம்  குறித்து முதல்வர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,  மாணவர்கள் இறந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் மீது  உரிய நடவடிக்ைக எடுக்க  மாவட்ட கலெக்டெருக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த மாணவர்களின்  குடும்பத்திற்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர் வரும் காலங்களில் மாநிலம்  முழுவதும் உள்ள விடுதிகளில் இது போன்ற துயர சம்பவங்கள் நிகழாமல்  இருக்க  தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மூலக்கதை