காணாமல் போன 74ம் ஆண்டு தினம் நேதாஜி பற்றி தெரிந்து கொள்ள உரிமையுண்டு: மம்தா கருத்து

தினகரன்  தினகரன்
காணாமல் போன 74ம் ஆண்டு தினம் நேதாஜி பற்றி தெரிந்து கொள்ள உரிமையுண்டு: மம்தா கருத்து

கொல்கத்தா: சுதந்திர இந்தியாவுக்கான விடுதலைப் போரில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பெரும்பங்கு உண்டு. தைவானில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறியதில் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. நேதாஜியின் மரணம் குறித்து  எந்தவொரு உறுதி செய்யப்பட்ட தகவலும் இதுவரை கிடையாது.இந்நிலையில், அவர் காணாமல் போன 74 ஆண்டு நினைவு தினமான நேற்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `கடந்த 1945ல் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தைவான் நாட்டின் தாய்ஹோகு விமான  நிலையத்தில் இருந்து புறப்பட்ட நேதாஜி காணாமல் போனார். அவருக்கு என்னவாயிற்று என்று இதுவரை யாருக்கும் தெரியாது. காணாமல் போன மண்ணின் மைந்தனான அவரை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு,’ என  கூறியுள்ளார்.நேதாஜி மரணம் குறித்த ரகசியத்தை அறிய மத்திய அரசு பல்வேறு கமிஷன்களை அமைத்தது. ஆனாலும், அவர் இறப்பு குறித்த உண்மைக்கு பதிலளிக்க யாராலும் முடியவில்லை. தைவான் விமான விபத்தில் அவர் இறந்ததாக கூறும் ஜப்பான்  அரசின் அறிக்கையையும் மத்திய அரசு நிராகரித்து விட்டது.

மூலக்கதை