பாக்., போராட்டக்காரர்களுடன் பா.ஜ., செய்திதொடர்பாளர் வாக்குவாதம்

தினமலர்  தினமலர்
பாக்., போராட்டக்காரர்களுடன் பா.ஜ., செய்திதொடர்பாளர் வாக்குவாதம்

சியோல்:ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், 370வது பிரிவு நீக்கத்தை எதிர்த்து, கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவின் சியோலில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுடன், பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஷாஜியா இல்மி உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு, நமது அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள இந்திய துாதரகம் எதிரே, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பாக்., கொடிகளை கையில் ஏந்தி, பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.சியோலில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஷாஜியா இல்மி, 49, உள்ளிட்ட சிலர், அப்போது, இந்திய துாதரகத்துக்கு சென்று கொண்டிருந்தனர். போராட்டம் நடப்பதை பார்த்த இல்மி உள்ளிட்டோர், அவர்களிடம் சென்று, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிடக் கூடாது என கூறினர். அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக, போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, இல்மி உள்ளிட்டோர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதைத் தொடர்ந்து, அங்கு வந்த, தென் கொரிய போலீசார், இல்மி உள்ளிட்டோரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

மூலக்கதை