ஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு

தினமலர்  தினமலர்
ஆவின் பால் விலை இன்று முதல் உயர்வு

சென்னை: அரசின் அறிவிப்பை தொடர்ந்து, ஆவின் பால் விலை உயர்வு, இன்று (ஆக.19) முதல் நடைமுறைக்கு வருகிறது. விரைவில், ஆவின் பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது.


கால்நடைகளுக்கான தீவனங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்ததால், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையேற்று, பால் கொள்முதல் விலை, லிட்டருக்கு, நான்கு ரூபாய் உயர்த்தப் பட்டுள்ளது.அதே நேரம், விற்பனை விலை, லிட்டருக்கு, 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு, இன்று முதல், நடைமுறைக்கு வருகிறது.

பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் நிறுவன தயாரிப்புகளான, பால்கோவா, தயிர், லஸ்ஸி, ஐஸ்க்ரீம், பனீர் உள்ளிட்டவற்றின் விலையும் விரைவில் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


முதல்வர், இ.பி.எஸ்., நேற்று, சேலத்தில் அளித்த பேட்டி: பெரும்பாலான பால் கூட்டுறவு சங்கங்கள், நஷ்டத்தில் இயங்குகின்றன. டீசல் விலை உயர்வால், பால் கொண்டு செல்லும் செலவு அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் தான் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கால்நடை தீவனங்களை, ரேஷன் கடையில் விற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை