ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி

தினமலர்  தினமலர்
ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி

புதுடில்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ராமர் கோவில் இருந்ததாக கூறி, கடந்த 1992ம் ஆண்டு, டிச.,6ல் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.



ராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு, நவம்பர், 17க்கு முன் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முகலாய மன்னர் பகதூர் ஷா ஜாபர், வழித்தோன்றலான ஹாபிபுதின் டுசி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொள்ள, தங்க செங்கல் ஒன்றை அன்பளிப்பாக வழங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.



வழங்க தயார்



மேலும், தான் பாபர் மசூதி கட்டிய, பாபர் மன்னரின்(1529) வழித்தோன்றல் என்று கூறும் இவ,ர் பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமிக்கு தாங்கள் தான் வாரிசு என்கிறார். உச்சநீதி மன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும். நிலத்தை ஒப்படைக்கும் பட்சத்தில், ராமர் கோவில் கட்டுவதற்கு, முழு நிலத்தையும் தந்து விடுவதாக தெரிவித்தார்.

இவர் தன் கோரிக்கையை முன் வைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருடைய மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இந்துக்களின் நம்பிக்கையை மதிப்பதாக கூறும் இவர். பாபர் காலத்தில் ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்காக இந்துக்களிடம் மன்னிப்பும் கோருகிறார்.

மூலக்கதை