நலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து

தினமலர்  தினமலர்
நலிவடைந்த பிரிவினர் கடன்கள் விரைவில் ரத்து

புதுடில்லி:பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், அரசு நிதி நிறுவனங்களில் வாங்கியுள்ள, குறைந்த தொகை கடன்களை, தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திருப்பிச் செலுத்த முடியாமல், நொடிந்து போயுள்ளவர்களின் கடன்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய அரசின், கம்பெனிகள் விவகாரத்துறை செயலர், இன்ஜெடி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளதாவது:கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற, அரசு சார்பு, சிறிய நிதி நிறுவனங்களில் இருந்து கடனாக பணம் பெற்று, திருப்பிச் செலுத்த முடியாதவர்களை பாதுகாக்கும் வகையில், புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதுl பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மட்டுமே இந்த சலுகை

* கடன் வாங்கியவரின் ஆண்டு வருமானம், 90 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது; அவரின் சொத்து மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

* அவர் வாங்கிய கடன், 35ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்

* கடன் வாங்கியவருக்கு, சொந்தமாக வீடு இருக்கக் கூடாது. ஒரு முறை கடன் தள்ளுபடி செய்யப்பட்டால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அந்த சலுகையை எதிர்பார்க்க முடியாது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்த திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தேசிய அளவில், இதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

மூலக்கதை