பங்களாவை காலி செய்யாத 200 முன்னாள் எம்பி.க்கள்

தினகரன்  தினகரன்
பங்களாவை காலி செய்யாத 200 முன்னாள் எம்பி.க்கள்

புதுடெல்லி:  200க்கும் மேற்பட்ட முன்னாள் எம்பிக்கள் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை இன்னும் காலி செய்து கொடுக்காமல் உள்ளனர். கடந்த 17வது மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று, 2வது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றது. அதற்கு முன்பாக,   16வது மக்களவையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலைத்து உத்தரவிட்டார். 16வது மக்களவை கலைக்கப்பட்டதும் அரசு ஒதுக்கீடு செய்த பங்களாக்களை முன்னாள் எம்பிக்கள் காலி செய்து ஒப்படைக்க வேண்டும். ஆனால், பதவி காலம் முடிந்து 2 மாதங்கள் ஆன நிலையிலும் முன்னாள் எம்பி.க்கள் டெல்லி லூதியானா பகுதியில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த பங்களாக்களை இதுவரை காலி செய்யவில்லை. இதன் காரணமாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் தற்காலிகமாக வேறு குடியிருப்புக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். டெல்லி லூதியானா பகுதியில் புதிய எம்பிக்களுக்கு பங்களா ஒதுக்கீடு செய்யும் வரை பல்வேறு விருந்தினர் மாளிகைகளில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக, எம்பிக்களின் குடியிருப்புக்கான செலவு குறைந்துள்ளது. முன்பெல்லாம் இதுபோன்று அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்யும் வரை எம்பிக்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதன் காரணமாக அரசுக்கு செலவு அதிகமாகும். தற்போது, இந்த செலவு குறைந்துள்ளது.  இந்த 17வது மக்களவைக்கு முதல் முறையாக 260க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது.

மூலக்கதை