ரஜினியுடன் அ.தி.மு.க., கூட்டணியா?: அமைச்சர் ராஜூ பதில்

தினமலர்  தினமலர்
ரஜினியுடன் அ.தி.மு.க., கூட்டணியா?: அமைச்சர் ராஜூ பதில்

நடிகர் ரஜினி கட்சியோடு, அ.தி.மு.க., கூட்டணி அமைக்குமா என்பது குறித்தெல்லாம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. நேரம் வரும்போதுதான், அது குறித்தெல்லாம் முடிவெடுக்கப்படும் என தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் கழுகுமலையில், அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எம்.ஜி.ஆர்., படங்களுக்கு அடுத்ததாக, ரஜினி படங்களைத்தான் நான் அதிகம் விரும்பிப் பார்த்திருக்கிறேன். அவர் அரசியல் கட்சி துவங்கி அரசியல் செய்ய முயற்சிப்பது குறித்து, நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. அரசியல் செய்வது என்பதெல்லாம் அவரது தனிப்பட்ட முயற்சி; செயல்பாடு. அதை யாரும் கேள்வி கேட்கவோ; தடுக்கவோ முடியாது. ஆனால், அவர் அரசியலுக்கு வந்தால், அவரோடு அ.தி.மு.க., கூட்டணி சேருமா என பலரும் கேட்கின்றனர். அதெல்லாம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. நேரம் வரும்போது, அதுகுறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.

மூலக்கதை