இயக்குனர் ஷங்கருக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தினமலர்  தினமலர்
இயக்குனர் ஷங்கருக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனரானவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர். அதன்பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன்,சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.ஓ என ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் பிரமாண்ட படங்களாக இயக்கி உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தவர்.

தற்போது கமல் நடிப்பில் இந்தியன்-2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 2021ல் திரைக்கு வருகிறது. இந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நேற்று ஆகஸ்டு 17-ந்தேதி தனது 55வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ஏராளமான இந்திய திரையுலக பிரபலங்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை