மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா

தினமலர்  தினமலர்
மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா

தமிழில் தேவி, தேவி-2 படங்களில் ஹாரர் கதையில் நடித்த தமன்னா, தற்போது பெட்ரோமாக்ஸ் படத்திலும் ஹாரர் கதையில் நடிப்பவர், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ஆக்சன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களில் நடித்துள்ள தமன்னா, தற்போது சென்ட்ரல் ஜெயில் பிரீதம் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். சந்தியா மேனன் இயக்கும் இந்த படம் ஜெயிலுக்குள் நடக்கும் ஒரு காமெடியான பேய்க்கதையை மையப்படுத்தி உருவாகிறது.

மூலக்கதை