சைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா

தினமலர்  தினமலர்
சைராவில் ஜான்சிராணியாக நடிக்கும் அனுஷ்கா

சிறிய இடைவேளைக்குப்பிறகு அனுஷ்கா நடித் துள்ள படம் சைரா நரசிம்ம ரெட்டி. சிரஞ்சீவி நடித் துள்ள இந்த படத்தில் நயன்தாரா, தமன்னா நாயகிகளாக நடிக்க, அனுஷ்கா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

அவர் இந்த படத்தில் எந்தமாதிரியான வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறித்து தகவல்களையும், அவர் சம்பந்தப்பட்ட போட்டோக்களையும் படக்குழு வெளியிடவில்லை. என்றாலும், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கும் நிலையில், அனுஷ்கா இந்த படத்தில் ஜான்சிராணி லட்சுமிபாய் வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

மேலும், இந்த படத்தின் பிளாஷ்பேக்கில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றாலும், சிரஞ்சீவியுடன் இணைந்து அவர் நடித்துள்ள காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள் ளதாம். அந்தவகையில், நயன்தாரா, தமன்னாவை விட, அனுஷ்காவே இந்த படத்தில் கதைக்கு திருப்புமுனை தரும் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை