அஜித் ரசிகர்களால் கிழிந்த திரை: தியேட்டர் நிர்வாகிகள் கோபம்

தினமலர்  தினமலர்
அஜித் ரசிகர்களால் கிழிந்த திரை: தியேட்டர் நிர்வாகிகள் கோபம்

நடிகர் அஜித்-வித்யா பாலன் ஆகியோர் நடிப்பிலும், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்திலும் வெளியான நடிகரும்; தயாரிப்பாளருமான போனிக் கபூரின் படம் நேர் கொண்ட பார்வை. இந்தப் படம், கடந்த 8ம் தேதி, உலகம் முழுவதும் ரிலீசானது. இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனை படைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் பிரான்ஸ் நாட்டில், லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் ரிலீசானது. படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே அஜித் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் திரை முன்பாக செல்லும் ரசிகர்கள், அஜித்தின் காலில் விழுவதும்; எழுவதுமாக இருந்தனர். பலர், திரை முன்பாக நடனமாடினர். இப்படி செய்து கொண்டிருந்த போது, ரசிகர்கள் சிலர் திரையில் சாய, திரை கிழிந்தது.

இதனால் தியேட்டர் நிர்வாகத்துக்கு விநியோகஸ்தர் சார்பில், நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இனிமேல் தமிழ் படங்கள் எதையும் வெளியிடுவதில்லை என தியேட்டர் நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. இந்த திரையரங்கில்தான் ஏற்கனவே, விஸ்வாசம், பேட்ட, சர்க்கார் உள்ளிட்ட பல தமிழ் படங்களும் ரிலீசாகி இருந்தன.

மூலக்கதை