துப்பறியும் வேலையில் விஷால்

தினமலர்  தினமலர்
துப்பறியும் வேலையில் விஷால்

திகில், த்ரில்லர் படங்களை எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர் இயக்குநர் மிஸ்கின். இவர் கடந்த 2017ல் துப்பறிவாளன் என்ற பெயரில், துப்பறியும் விஷயத்தை வைத்து, ஒரு படம் இயக்கினார். விஷால், பிரசன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான அந்தப் படத்தில் வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா, அனு இமானுவேல் உள்ளிட்ட பலரும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர்.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிகர் விஷால் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன், அந்த படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருக்கையில், நடிகர் விஷாலை சூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று சந்திந்த இயக்குநர் மிஷ்கின், துப்பறிவாளன் 2 படத்தில், நடிகர் விஷாலை நடிக்க வைப்பது குறித்து பேசி முடித்தார்.

அந்தப் படமும், துப்பறியும் வேலையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம்தான். இந்தப் படத்தில், நடிகர் விஷாலின் நண்பனாக நடிக்கிறார் பிரசன்னா. அவர் மனோகர் என்ற கேரக்டர் பெயரில் நடிக்கிறார். சமூக வலைதளங்களில் துப்பறியும் பணி குறித்து என்னவெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்ற தகவலை, நடிகர் விஷாலுக்குச் சொல்லி, குற்றங்களை கண்டறிய உதவுவார்.

அதேபோல, சூட்டிங் பணிகளை, இந்தப் படத்துக்காக, இந்தியாவிலேயே நடத்த வேண்டாம் என முடிவெடுத்து, வெளிநாட்டுக்கு பறக்கவிருக்கிறார் மிஷ்கின். கூடவே, லண்டனில் சூட்டிங் ஸ்பாட் தேடிக் கொண்டிருக்கிறார். விஷால் நடிக்கும் இந்தப் படத்தை அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

மூலக்கதை