செப்டம்பரில் பழுக்கும் ஆப்பிள்

தினமலர்  தினமலர்
செப்டம்பரில் பழுக்கும் ஆப்பிள்

செப்டம்பர், 10ம் தேதி, ஆப்பிள் நிறுவனம், புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. ஐபோன் 11, ஐபோன் 11புரோ, ஐபோன் 11மேக்ஸ் ஆகிய போன்கள் அறிமுகம் ஆகும் என, ஆரூடம் சொல்கிறார்கள்.ஐபோன் 11 மாடல், ஐபோன் 10 ஆர் மாடலின் தொடர்ச்சியாக இருக்கும் என்றும்; 6.1 அங்குல திரையுடன், இரண்டு பின்புற கேமரா கொண்டதாக இருக்கும் என்றும் தெரிகிறது. ஐபோன் 11 புரோ, ஐபோன் 11 மேக்ஸ் ஆகியவை, ஐபோன் 10 எஸ்., ஐபோன் 10 எஸ்., மேக்ஸ் ஆகிய மாடல்களின் அடுத்த கட்டமாக இருக்கும்.இந்த இரண்டு போன்களும், 5.8 அங்குலம் மற்றும் 6.5 அங்குலம் திரை கொண்டவையாக இருக்கும். இந்த போன்கள், மூன்று கேமரா அமைப்பை கொண்டவையாக இருக்கும் என்கிறார்கள்.சந்தைக்கு வந்தால், சங்கதி தெரிந்துவிடும்.

மூலக்கதை