ஆகஸ்ட் அறிமுகங்கள்

தினமலர்  தினமலர்
ஆகஸ்ட் அறிமுகங்கள்

ரியல்மி 5 சீரிஸ்'ரியல்மி 5' சீரிஸ் போன்கள், இந்தியாவில், 20ம் தேதியன்று அறிமுகம் ஆகின்றன.'ரியல்மி 5', 'ரியல்மி 5 புரோ' என, இரண்டு போன்கள் அறிமுகம் ஆகின்றன. இதே சீரிஸில், மூன்றாவதாக ஒரு போனும் தயாராகி வருகிறது. அதில், 64 எம்.பி., கேமரா இருக்கும் என்றும், அக்டோபர் மாதத்தில் அறிமுகம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.


'ரியல்மி 5' மற்றும் 'ரியல்மி 5 புரோ' போன்கள், மூன்று கேமரா செட்-அப் உடன் வருகின்றன. ’48 எம்.பி., சோனி ஐ.எம்.எக்ஸ்., 586’ சென்சாருடன் கூடிய கேமராவாக அது இருக்கும் என்கிறார்கள். மேலும், ’அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார்’ கொண்டதாகவும், கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த இரண்டு போன்களுமே, கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவையாக இருக்கும் என்கிறார்கள்.***சயோமி மி ஏ3சயோமி நிறுவனம், அதன், ’மி ஏ3’ ஸ்மார்ட்போனை, 21ம் தேதியன்று, இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ’ரியல்மி 5 சீரிஸ்’ போன்கள் அறிமுகம் ஆனதற்கு மறுநாள், ’மி ஏ3’ அறிமுகம் ஆகிறது.உலகின் பிற சந்தைகளில், இந்த போன் ஏற்கெனவே அறிமுகமாகி விட்டது. தற்போது இந்தியாவில் அறிமுகமாகிறது.


சிறப்பம்சங்கள்:பின்புறத்தில், மூன்று கேமரா சென்சார்48 எம்.பி., பிரைமரி கேமரா6.08 அங்குல, ஓ.எல்.இ.டி., திரை1520x720 பிக்ஸல்4ஜி.பி.,/64/128ஜி.பி.,4030 எம்.ஏ.எச்., பேட்டரிகூகுள் ஆண்ட்ராய்டு ஒன் மென்பொருள்எதிர்பார்க்கும் விலை 19,000 ரூபாய்***மோட்டோரோலா நிறுவனமும், அதன் பங்குக்கு, ஆகஸ்டில் புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிகிறது.’மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன்’ எனும் இந்த போன், 23ம் தேதியன்று, இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தெரிகிறது.


இருப்பினும், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.’சாம்சங் கேலக்ஸி எம் 30’ போனுக்கு இணையானதாக, ’ஒன் ஆக்‌ஷன்’ இருக்கும் என கருதப்படுகிறது. சிறப்பம்சங்கள்:6.3 அங்குல திரைஐ.பி.எஸ்., எல்.சி.டி., புல் எச்.டி., திரைமூன்று கேமரா செட் _அப்48 எம்.பி, பிரைமரி கேமரா3,500 எம்.ஏ.எச்., பேட்டரி3 ஜி.பி.,/ 32 ஜி.பி.,எதிர்பார்க்கும் விலை 17,000 ரூபாய்***

மூலக்கதை