அபராதம்! 'டெங்கு' கொசு உற்பத்தி ...11 கட்டுமான நிறுவனங்களுக்கு

தினமலர்  தினமலர்
அபராதம்! டெங்கு கொசு உற்பத்தி ...11 கட்டுமான நிறுவனங்களுக்கு

சோழிங்கநல்லுார்: அடையாறு மற்றும் சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 'டெங்கு' கொசு உற்பத்திக்கு காரணமான, 11 கட்டுமான நிறுவனங்களுக்கு, 1.97 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., பகுதியை உள்ளடக்கிய, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், ஒன்பது வார்டுகள் உள்ளன.இங்கு, 100க்கும் மேற்பட்ட இடங்களில், புதிய கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. இரண்டு நாட்களாக, மண்டல சுகாதார அதிகாரிகள், கட்டுமான பணித்தளங்களை ஆய்வு செய்தனர்.
இதில், 10 கட்டுமான பணித்தளங்களில், 'டெங்கு' பரப்பும் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 10 கட்டுமான நிறுவனங்களுக்கு, 97 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடையாறு மண்டலம், 175வது வார்டு, எல்.பி., சாலையில், ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது.
இங்கு, நேற்று சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.டெங்கு பரப்பும், லட்சக்கணக்கான கொசுப்புழுக்கள், உற்பத்தியாகி இருந்ததால், கட்டுமான நிறுவனத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மூலக்கதை