வசூலை குவிக்கும் மிஷன் மங்கல்: 2 நாளில் 40 கோடி அள்ளியது

தினமலர்  தினமலர்
வசூலை குவிக்கும் மிஷன் மங்கல்: 2 நாளில் 40 கோடி அள்ளியது

கடந்த 14ந் தேதி வெளியான படம் மிஷன் மங்கல். இது இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ முதன் முறையா மங்கள்யான் ராக்கெட்டை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியதை மையமாக கொண்டு உருவான படம். இதில் அக்ஷய்குமார், வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன் உள்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஜெகன் ஷக்தி இயக்கி இருந்தார்.

இந்த படம் வெளியான இரண்டு நாளில் (வியாழன், வெள்ளி) 17 கோடியே 28 லட்சம் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் வசூலானது 46 கோடியே 44 லட்சம். அக்ஷய்குமார் நடித்த படங்களிலேயே இதுதான் ஓப்பனிங் கலெக்ஷனில் அதிகம். மேற்கண்ட தகவல் தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டள்ளது. 32 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் 100 கோடியை தாண்டி வசூலிக்கும் என்கிறார்கள்.

மூலக்கதை