ராஜா ராணி ஷப்னத்திற்கு அடுத்த மாதம் 7ந் தேதி திருமணம்

தினமலர்  தினமலர்
ராஜா ராணி ஷப்னத்திற்கு அடுத்த மாதம் 7ந் தேதி திருமணம்

தெய்வ மகள், ராஜா ராணி தொடர் மூலம் புகழ்பெற்றவர் ஷப்னம். அந்த தொடர் சமீபத்தில் முடிந்தது. அடுத்த தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த இடைவெளியில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஷப்னத்தின் தூரத்து உறவினர் ஆர்யன். இவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார் ஷப்னம்.

இரு வீட்டாரும் இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்ட கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2018 பிப்ரவரி 14ந் தேதி திருமணம் என்று நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் திருமணம் நடக்கவில்லை.

இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். நிச்சயதார்த்தம் முறிந்து விட்டது என்றெல்லாம் செய்தி பரவியது. இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். சொந்த ஊரில் எளிய முறையில் திருமணம் நடக்கிறது. 8ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

மூலக்கதை