ராணுவ படத்திற்காக கைகோர்க்கும் மேஜர் ரவி - டொவினோ தாமஸ்

தினமலர்  தினமலர்
ராணுவ படத்திற்காக கைகோர்க்கும் மேஜர் ரவி  டொவினோ தாமஸ்

மலையாள திரையுலகில் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்களாக எடுத்து தனக்கென ஒரு தனி பாதையில் பயணிப்பவர் இயக்குனர் மேஜர் ரவி.. ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் மிகவும் நுணுக்கமான விஷயங்கள் புதுவிதமான கதை அமைப்பு ஆகியவற்றை கையாள்வது இவரது ஸ்பெஷாலிட்டி.

மோகன்லால் மம்முட்டி பிரித்விராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து படம் இயக்கி வந்த மேஜர் ரவி கடந்த இரண்டு வருடங்களாக டைரக்சனுக்கு இடைவெளிவிட்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது மீண்டும் ஒரு ராணுவ படத்தை இயக்க இருக்கிறார் மேஜர் ரவி. இந்த படத்தில் கதாநாயகனாக இளம் நடிகரும் மாரி-2 பட வில்லனுமான டொவினோ தாமஸ் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான தீவிர கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டுள்ளாராம் மேஜர் ரவி.

மூலக்கதை