படப்பிடிப்பு நடக்கும்போதே விலைபோன ஷைலாக் சாட்டிலைட் உரிமை

தினமலர்  தினமலர்
படப்பிடிப்பு நடக்கும்போதே விலைபோன ஷைலாக் சாட்டிலைட் உரிமை

ஒரு படம் படப்பிடிப்பு முடிவடைந்து அனைத்து போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகும் நிலையைத்தான் சாட்டிலைட் உரிமை விற்பனையாவது வழக்கம் ஆனால் தற்போது மம்முட்டி நடித்து வரும் ஷைலாக் என்கிற படம் துவங்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து கைப்பற்றியிருக்கிறது சூர்யா டிவி.

மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் மூலம், முதன்முறையாக நடிகர் ராஜ்கிரன் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் நடிகை மீனா கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து ராஜாதிராஜா மாஸ்டர்பீஸ் ஆகிய படங்களை இயக்கிய அஜய் வாசுதேவ் இந்த படத்தை இயக்கி வருகிறார்

மூலக்கதை