ஜெட்லி கவலைக்கிடம்

தினமலர்  தினமலர்
ஜெட்லி கவலைக்கிடம்

புதுடில்லி, : டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி பியுஷ் கோயல் மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நிலை குறித்து விசாரித்தனர்.பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு 66 கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.


கடந்த பிப். 1ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டை கூட ஜெட்லிக்கு பதில் அமைச்சர் பியூஸ் கோயல் தான் தாக்கல் செய்தார். உடல்நலக்குறைவை காரணம் காட்டி கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் நடந்த லோக்சபாதேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.இந்நிலையில் 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகதகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி பியுஷ் கோயல் ஹர்ஷ் வர்தன் விமானப்படை தலைமை தளபதி பிரேந்தர் சிங் தனோவா காங். தலைவர்கள் அபிஷேக் சிங்வி ஜோதிராதித்யா சிந்தியா பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் சென்று அருண் ஜெட்லியின் உடல் நிலை பற்றி விசாரித்தனர்.


மூலக்கதை