இந்தியாவில் உலகின் மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் : மோடி

தினமலர்  தினமலர்
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் : மோடி

திம்பு : உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இந்தியாவில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, திம்புவில் உள்ள ராயல் பல்கலை.,யில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பூடானுக்கு யார் வந்தாலும் அதன் இயற்கை அழகு,ரம்மியம், மக்களின் எளிகை ஆகியன அனைவரையும் கவரும். பூடானுக்கும், இந்தியாவுக்கும் இடையே மிகப் பெரிய பிணைப்பு இருப்பது இயற்கையானது. நாம் புவியியல் ரீதியாக மட்டுமல்ல வரலாறு, கலச்சாரம், ஆன்மிக பண்பாடு ஆகியன இரு நாடுகள் மற்றும் நாட்டு மக்களிடையே தனித்துவம் வாய்ந்த பிணைப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்திட்டம் 500 மில்லியன் இந்தியர்களுக்கும் சுகாதார காப்பீட்டை வழங்கி உள்ளது. உலகிலேயே மிக குறைந்த விலையில் டேட்டா இணைப்பு இந்தியாவில் கிடைக்கிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானவர்கள் பலனடைந்துள்ளனர்.

எனது 'Exam Warriors' புத்தகத்தில் நான், புத்தரின் போதனைகளால், குறிப்பாக முக்கியமான நேர்மறையான, பயத்தை எதிர்கொள்ளுதல், தனித்து இருத்தல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளேன். பூடானின் சிறிய ரக செயற்கைகோளை ஏவுவதற்காக பூட்டானிய விஞ்ஞானிகள் இந்தியா வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களில் பலர் விஞ்ஞானிகளாகவும், இன்ஜினியர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் விரைவில் வருவீர்கள் என நம்புகிறேன்.

2022 ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் இந்தியாவிடம் உள்ளது. சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானது. இவ்வாறு மோடி பேசினார்.

மூலக்கதை