பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வருகிறது விருப்ப ஓய்வு

தினமலர்  தினமலர்
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வருகிறது விருப்ப ஓய்வு

புதுடில்லி, 'விருப்ப ஓய்வு பெறுவதற்கான அறிவிப்புஇம்மாத இறுதியில் வெளியாகும்' என்ற எதிர்பார்ப்பில் பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் உள்ளனர்.

தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேலான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மொத்த வருவாயில் 65 சதவீதம் ஊழியர்கள் சம்பளத்திற்கு போய் விடுகிறது.

இதனால் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.எனவே ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கவும் ஓய்வூதிய வயதை 58 ஆக குறைக்கவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இது குறித்து பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்கூறியதாவது:

ஊதிய உயர்வை வழங்கவும் '4ஜி' அலைக்கற்றையை உடனடியாக வழங்கவும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடிக்கடிகோரிக்கை வைத்தனர்.இதனால் ஓய்வூதிய வயதை 58 ஆக குறைக்கவும் 56 வயதுக்கு மேல் உள்ளவர்களை விருப்ப ஓய்வில் வீட்டுக்குஅனுப்பவும் இந்த ஆண்டு துவக்கத்தில் கார்ப்பரேட் அலுவலகம் ஆலோசனை நடத்தியது.இந்த ஆலோசனை தற்போது முடிவாக மாறி உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை