திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 384 மி. மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோடை காலத்துக்கு பின்னரும் வெயில் வாட்டி வதைத்தது. அனல்காற்று வீசியதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழையால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, ஜமீன் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மற்ற பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது.

விடிய விடிய பெய்த மழையால் சாலையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனிடையே, வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 49 மி. மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக ஆர். கே. பேட்டையில் 6 மி. மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி. மீட்டரில்) விவரம்: ஜமீன் கொரட்டூர்- 49, ஊத்துக்கோட்டை- 48, திருவள்ளூர்- 36, பூந்தமல்லி- 36, பூண்டி- 35. 60, தாமரைப்பாக்கம்- 34, சோழவரம்- 28, கும்மிடிப்பூண்டி- 23, செங்குன்றம்- 18, திருவாலங்காடு- 18, செம்பரம்பாக்கம்- 16, திருத்தணி- 14, பொன்னேரி- 13, பள்ளிப்பட்டு- 10, ஆர். கே. பேட்டை- 6. மொத்தம்- 384. 60 மி. மீட்டர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காலை வெயில் கொளுத்தியது. மாலையில் கருமேகம் சூழ்ந்து மழை தூறியது.

நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை வரை மிதமான மழை பெய்தது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், அச்சிறுப்பாக்கம், உத்திரமேரூர், பெரும்புதூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
காஞ்சிபுரத்தில் ரெங்கசாமிகுளம், சுங்கச்சாவடி, கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை, ரெட்டைமண்டபம், கரிக்கினில் அமர்ந்தவள் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அவதிப்பட்டனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.

மாவட்டத்தில் பெய்த மொத்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: காஞ்சிபுரம்- 16, பெரும்புதூர்-58. 20, உத்திரமேரூர்-28, வாலாஜாபாத்-10, திருப்போரூர்-32. 80, செங்கல்பட்டு-23, திருக்கழுக்குன்றம்-15. 30, மாமல்லபுரம்-27. 40, மதுராந்தகம்-40, செய்யூர்-2. 50, தாம்பரம்-6, கேளம்பாக்கம்-12. 02, கல்பாக்கம்-27. 40.

.

மூலக்கதை