திருத்தணி நீதிமன்றத்துக்கு வந்த வாலிபர் வெட்டிக் கொலை ஏன்?... திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருத்தணி நீதிமன்றத்துக்கு வந்த வாலிபர் வெட்டிக் கொலை ஏன்?... திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

திருத்தணி: திருத்தணி நீதிமன்றத்துக்கு வந்த வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகிய உள்ளது. திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே நேற்று மதியம் 2. 30 மணியளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் வாழைப்பழம் சாப்பிட்டபடி நடந்து சென்றார்.

அப்போது ஒரு காரில் வந்த 4 பேர் அந்த வாலிபரை வழிமறித்து தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பியோடி அங்குள்ள ஓட்டலுக்குள் புகுந்தபோது அந்த வாலிபரை சரமாரியாக வெட்டி கொன்றனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

திருத்தணி போலீசார் சென்று வாலிபரின் சடலத்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவர் பற்றி விசாரித்தபோது, திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டையை சேர்ந்த மகேஷ் (35) என தெரியவந்தது.

மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்தன் உத்தரவின்பேரில், டிஎஸ்பி சேகர் தலைமையில் தனிப்படை போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டு செவ்வாய்பேட்டையில் வாலிபால் போட்டி நடத்துவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி மகேஷ் தரப்பை சேர்ந்த விக்கி என்பவரை செவ்வாய்பேட்டையில் மற்றொரு தரப்பு கொலை செய்தது.



மகேஷ் தரப்பினர், விக்கி கொலைக்கு காரணமான கார்த்திக், தனது மனைவியுடன் பைக்கில் சென்றபோது மிரட்டியுள்ளனர். இதை தட்டி கேட்க கடந்த மாதம் 1ம்  தேதியன்று கார்த்திக்கின் தம்பி தினேஷ், மகேஷ் தரப்பினரை தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதில் பால்தினகரன், இன்னொரு விக்கி, தினேஷ் ஆகிய 3 பேரும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்துவதற்காக திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர்.



இதை அறிந்த மகேஷ் ரயில் மூலம் திருத்தணி வந்துள்ளார். அங்கு நீதிமன்றத்தில் நண்பர்களை பார்ப்பதற்காக நடந்து சென்றார்.

அப்போது இவரை பின்தொடர்ந்து மகேஷை கொல்வதற்காக எதிர்தரப்பினரும் கார் மற்றும் பைக்கில் வந்துள்ளனர். மகேஷை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இவ்வாறு தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி நடைபெற்ற விக்கி கொலை வழக்கில் மற்றொரு தரப்பை சேர்ந்த விக்னேஷ், அஜித்குமார், ராஜ்குமார், தினேஷ், அஸ்வின் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினேஷின் அண்ணன் கார்த்திக்கை கடந்த 1ம் தேதி இறந்து போன மகேஷ் தரப்பினர் மிரட்டியுள்ளனர்.

இதை தட்டிக்கேட்க வந்த தினேஷை மகேஷ் தரப்பினர் சுற்றி வளைத்து வெட்டியபோது தினேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட பால்தினகரன், விக்கி, தினேஷ் ஆகியோரை பார்ப்பதற்காக மகேஷ் வந்துள்ளார் என தெரியவந்தது.

 

.

மூலக்கதை