சுற்றுலா மேம்பாட்டு நிறுவன நிகர லாபம்

தினமலர்  தினமலர்
சுற்றுலா மேம்பாட்டு நிறுவன நிகர லாபம்

சென்னை:இந்திய சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு, 2019 – 20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 2.90 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டி உள்ளது.



இது குறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்திய சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம், மத்திய சுற்றுலா துறையின் கீழ் இயங்கும், பொதுத் துறை நிறுவனம். இந்த நிறுவனம், நடப்பு, 2019 – 20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 66.06 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டி உள்ளது.


இதுவே, 2018 – 19ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், வருவாய், 77.11 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனம் நிகர லாபமாக, 2.90 கோடி ரூபாயை ஈட்டி உள்ளது.இவ்வாறு, நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை