3,000 நிறுவனங்கள் 6 மாதங்களில் துவக்கம்

தினமலர்  தினமலர்
3,000 நிறுவனங்கள் 6 மாதங்களில் துவக்கம்

சென்னையில் நடைபெற்ற, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில், 3,000 நிறுவனங்கள், கடந்த ஆறு மாதங்களில் தொழில் துவங்கியுள்ளன.



தமிழக அரசு சார்பில், இரண்டாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கடந்த ஜனவரி, 23, 24 ஆகிய நாட்களில் சென்னையில் நடந்தது.இந்த மாநாட்டில், 304 பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் வாயிலாக, 3 லட்சத்து, 431 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.



மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில், 12 ஆயிரத்து, 360 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, 32 ஆயிரத்து, 206 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டது.இதில், தற்போது வரை, 3,000 நிறுவனங்கள் தொழில் துவங்கியுள்ளன. இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில், 3,000 நிறுவனங்கள், கடந்த ஆறு மாதங்களில் தொழில் துவங்கி உள்ளன.



இதன் வாயிலாக, 4,000 கோடி ரூபாய் முதலீடும், 41 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளன.தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்கள், தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளன.தொழில் துவங்குவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதற்கான தீர்வுகள் குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. விரைவில், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


– நமது நிருபர் –

மூலக்கதை