இன்றுவரை 90 லட்சம் பேர் வருகை: அத்திவரதர் தரிசனம் நாளையுடன் நிறைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்றுவரை 90 லட்சம் பேர் வருகை: அத்திவரதர் தரிசனம் நாளையுடன் நிறைவு

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவம் நாளையுடன் நிறைவுபெறுவதால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் பல மணி நேரம் காத்திருந்த தரிசனம் செய்கின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவ விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இதையொட்டி சயன கோலத்தில் ஜூலை 31ம் தேதிவரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். குடியரசு தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்பட இன்றுவரை 90  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

46வது நாளான இன்று புஷ்பாங்கி சேவையிலும் பல வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு அத்திவரதர் காட்சியளித்தார்.

இன்று அதிகாலை வரை 60 ஆயிரம்  பக்தர்கள்  தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அத்திவரதர் தரிசனத்துக்கு நாளை கடைசி நாள் என்பதால் இன்று அதிகாலை கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அவர்களை வரிசையில் அனுப்பிவைக்க போலீசார் திண்டாடி வருகின்றனர்.

விஐபி தரிசனம் ரத்து

விஐபி மற்றும் விவிஐபி பாஸ்களுக்கு இன்று முதல் அனுமதி கிடையாது.

இதன்காரணமாக பொது தரிசன பாதையில் பக்தர்கள் முண்டியடிக்கின்றனர். எப்படியாவது அத்திவரதரை தரிசனம் செய்துவிட வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர்.


.

மூலக்கதை