தர சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடு

தினமலர்  தினமலர்
தர சான்றிதழ் பெற நிதி ஒதுக்கீடு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தரச் சான்றிதழ் பெற செலுத்திய கட்டணத்தில், 1 லட்சம் ரூபாய் வரை திரும்பப் பெற, தமிழக அரசு நிதி ஒதுக்கி, ஆணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை விபரம்:


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சர்வதேச போட்டித் தன்மையை மேம்படுத்த, தரச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை ஈடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதன்படி, ஐ.எஸ்.ஓ., 9000, 14001, பி.ஐ.எஸ்., உட்பட, ஒன்பது வகையான தரச் சான்றிதழ்களைப் பெற செலுத்திய தொகையை, 100 சதவீதம் வரை திரும்பப் பெற, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


இதற்காக, தமிழக அரசு, 1.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதில், தரச் சான்றிதழ் குறித்து சிறு, குறு தொழில் நிறுவனங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்டத்திற்கு, 1 லட்சம் ரூபாய் என, 32 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மீதம் உள்ள, 1.5 கோடி ரூபாய், தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு, அவர்கள் செலுத்திய கட்டணத் தொகையை, திரும்ப வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

மூலக்கதை