காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரம் : ரஜினி பாராட்டு

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரத்தில் ராஜதந்திரம் : ரஜினி பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ராஜ தந்திரத்துடன் கையாண்டதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினி, கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. காஷ்மீர், இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாகவும், தாய்வீடாகவும் இருந்தது. எனவே இந்த விவகாரத்தை ராஜதந்திரத்துடன் அமித் ஷா, மோடி கையாண்டுள்ளனர்.

மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு இணையாக கூறப்பட்டது குறித்து கேட்டதற்கு, கிருஷ்ணன் யோசனை வழங்குபவர், அதை செயல்படுத்துபவர் அர்ஜுனன். ராஜதந்திரத்துடன் செயல்பட்டதால் அவ்வாறு கூறினேன். எதை அரசியல் ஆக்க வேண்டும், ஆக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்ய கூடாது என்றார்.

மேலும், தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்காமல் போனது வருத்தம் அளிக்கிறது. இதுப்பற்றி விருது குழுவில் உள்ளவர் தான் விளக்க வேண்டும். கட்சி அறிவிப்பு குறித்தும், தமிழக அரசியல் மையமாக போயஸ் கார்டன் வருமா என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள் என அவர் கூறினார்.

மூலக்கதை