நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், வேண்டாத வம்பை பாரதிய ஜனதா அரசு விலைக்கு வாங்குகிறது என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், வேண்டாத வம்பை பாரதிய ஜனதா அரசு விலைக்கு வாங்குகிறது என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள

நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், வேண்டாத வம்பை பாரதிய ஜனதா அரசு விலைக்கு வாங்குகிறது என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பிறகும் இந்த பிரச்னையில் பின்வாங்கப்போவதில்லை என்று பிரதமர் கூறியிருப்பது சரியானது அல்ல என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையைப் பாதுகாத்திடத் தவறினால், விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து, வேண்டாத வம்பை பாரதிய ஜனதா அரசு விலைக்கு வாங்குகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

மூலக்கதை