முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

மதுரை : முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பினை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது. முல்லை பெரியாறு அணை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் 8 ஆயிரம் ஏக்கர் அளவு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு புகார் தெரிவித்து இருந்தது. ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணியில் மத்திய காவல்படையை நிறுத்தவும் மனுவில் விஜயகுமார் கோரியிருந்தார்.

மூலக்கதை