இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?....தலைமை செயலாளர், டிஜிபி-க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?....தலைமை செயலாளர், டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: அத்திவரதர் வைபவத்தின் போது, இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சிபுரம் கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலில் 48 நாள் வைபவம் நடந்து வருகிறது.

இதற்காக தினமும் லட்சகணக்கில் பக்கதர்கள் குவிந்து பல மணி நேரம் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திடீரென விவிஐபிகளுக்கான வரிசையில் சோதனை நடத்தினர்.

அப்போது பலர் பாஸ் இல்லாமல், இந்த வரிசையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அங்கே பணியில் இருந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை கடுமையான வார்த்தைகளால் திட்டினார், மேலும் சஸ்பெண்ட் செய்யாமல் விடமாட்டேன் என்றும், ஒருமையிலும் திட்டி தீர்த்தார். இதனை அருகே இருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீட்டியோ சில நிமிடங்களில் பரவி, விவகாரம் மக்களின் விமர்சனத்துக்கு வந்தது. இது குறித்த செய்திகள் நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சிகளிலும் வெளியானது.



இந்தநிலையில், இந்த செய்தியினை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன் நேற்று, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கோயிலில் பாதுகாப்பில் இருந்த மற்ற போலீசார் முன்பு இன்ஸ்பெக்டரை கலெக்டர் திட்டிய சம்பவம் மனித உரிமை மீறல் ஆகாதா, உணவின்றி இரவு, பகலாக உண்மையாக வேலை செய்த  மற்ற போலீசார் மத்தியில் இந்த செயல் ஒரு மன அமைதி இல்லாத சூழல் ஏற்படுத்தாத? மேலும் இன்ஸ்பெக்டரை திட்டிய ஆட்சியர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள என்பது குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார.

.

மூலக்கதை