கேரளாவில் மீண்டும் கனமழை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 750 குவாரிகளுக்கு தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் மீண்டும் கனமழை ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: 750 குவாரிகளுக்கு தடை

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பொது மக்களின் இயல்வு வாழ்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

மலப்புரம், வயநாடு, இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. ெதாடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் கடந்த ஒரு வாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை மற்றும் வயநாடு மாவட்டம் புத்துமலை உள்பட மொத்தம் 80 இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் கவளப்பாறையில் இருந்து மட்டும் 23 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்னும் 36 பேர் மண்ணுக்கடியில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதேபோல் புத்துமலையில் 18 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிருந்து இதுவரை 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படையினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 2 தினங்களாக கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறைந்திருந்தது.

இந்த நிலையில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் மழை மிரட்டத் தொடங்கி உள்ளது. இதனால் இன்று ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, கோட்டையம், காசர்கோடு உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இதனால் பம்பை, மீனச்சல் உட்பட அனைத்து ஆறுகளிலும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.



மழை மீண்டும் பெய்யத்தொடங்கி உள்ளதால் கவளப்பாறை மற்றும் புத்துமலையில் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக கேரளா முழுவதும் உள்ள வெள்ள நிவாரண முகாம்களில் 2. 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லை பெரியாறில் நீர்மட்டம் 130 அடியை தாண்டியுள்ளது. மழை தொடர்வதால் நீர்மட்டம் மேலும் கிடுகிடுவென உயர வாய்ப்புள்ளது.

கனமழை காரணமாக கோட்டயம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

750 குவாரிகளுக்கு தடை

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் 8 மாவட்டங்களில் 80 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதில் மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் மட்டும் 70க்கும் மேற்பட்ேடார் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அடுத்தடுத்து ஏற்படும் நிலச்சரிவுக்கு மலையோர பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகள்தான் காரணம் என்றும், இதனால் இந்த கல்குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேரள சுற்றுச்சூழல் அமைப்பு அரசிடம் சிபாரிசு செய்திருந்தது. இதையடுத்து கேரளா முழுவதும் செயல்பட்டு வந்த 750 கல்குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கல் குவாரிகளுக்கும் இந்த தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

.

மூலக்கதை