பிக்பாஸ்: கஸ்தூரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தினமலர்  தினமலர்
பிக்பாஸ்: கஸ்தூரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சினிமா பிரபலங்கள் இடையே பெரும் போட்டியே நடக்கிறது. இதற்கு காரணம் பெயர், புகழ், பணம் என அனைத்தும் கிடைப்பது தான்.

ஆனால் இதில் அதிக ரிஸ்க்கும் இருக்கிறது. ஒருவேளை ஒருவருடைய நல்ல பெயரும் இந்த நிகழ்ச்சியினால் கெட்டுப் போகலாம். எனவே ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்கள் இதில் கலந்துகொள்ள யோசிப்பார்கள்.

அதுபோல தான் நடிகை கஸ்தூரியும் கடந்த இரண்டு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்தார். ஆனால் விடாபிடியாக வீட்டிற்குள் அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். அதற்காக அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் நம்மை அதிர வைக்கிறது.

நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்தில் இருந்து மூன்று லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீதமுள்ள நாட்கள் அவர் உள்ளே இருந்தால், சுமார் ஒரு கோடி ரூபாய் வரை கஸ்தூரிக்கு சம்பளம் கிடைக்கும் என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த சீசனை பொறுத்த வரை சேரனுக்கு தான் அதிக சம்பளம் தரப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அவரையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது கஸ்தூரியின் சம்பளம்.

மூலக்கதை