லண்டன் பல்கலைகழகத்தில் மாட்டிறைச்சிக்கு விற்பனைக்கு தடை

தினகரன்  தினகரன்
லண்டன் பல்கலைகழகத்தில் மாட்டிறைச்சிக்கு விற்பனைக்கு தடை

லண்டன்: லண்டனில் உள்ள கோல்ட்ஸ்மித் பல்கலைகழக கேன்டீனில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற இறைச்சிகள் தொடர்ந்து உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காலநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைளை மேற்கொள்ள கோல்ட்ஸ்மித் பல்கலைகழக நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாக மின் உற்பத்திக்கு அதிகமான சோலார் தகடுகளை நிறுவ முடிவு செய்துள்ளது.மறுசுழற்சி முறையில் ஆற்றலை உற்பத்தி செய்யவும், சுற்றுச்சூழலில் உள்ள கார்பன்களை உள்ளிழுப்பதற்காக அதிக மரங்களை நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட்டில் தண்ணீருக்கு கூடுதலாக 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தவும் மற்றும் 2025 ம் ஆண்டிற்குள் கார்பன் அளவை முற்றிலுமாக குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மற்றொரு நடவடிக்கையாக காலநிலை மாறுபாட்டிற்கு ஏற்றவாறு மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளது. 2018 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி100 கிராம் மாட்டிறைச்சி 105 கிலோ கிராம் கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே சமயம், சோயா மற்றும் பன்னீர் சேர்த்து செய்யப்படும் டோபு 100 கிராமில் இருந்து 3.5 கிலோ கிராமிற்கும் குறைவான கிரீன்ஹவுஸ் வாயுவை வெளியிடுவதாகவும் தெரிய வந்ததுள்ளது.இதுனால் குறைந்த அளவு இறைச்சி மற்றும் பால் பொருட்களை உண்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தாவர உணவுகள் அடிப்படையிலான அசைவ உணவுகளை கோல்ட்ஸ்மித் உணவகங்களில் விற்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலநிலையின் நெருக்கடி காரணமாக மாட்டிறைச்சி தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கார்பன் பயன்பாடு உலக அளவில் குறைக்கப்பட்டு வருவதாலும், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கோல்ட்ஸ்மித் வார்டனான பிரான்சிஸ் கார்னர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை