தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி விவகாரம்: டிராவிட் மீது இரட்டை பதவி புகார் இல்லை...நிர்வாக கமிட்டி நற்சான்றிதழ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி விவகாரம்: டிராவிட் மீது இரட்டை பதவி புகார் இல்லை...நிர்வாக கமிட்டி நற்சான்றிதழ்

மும்பை: தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் அறிவிக்கப்பட்டார். இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் திராவிட் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் பதவியிலும் இருந்து வருகிறார்.

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையது. எனவே, ‘டிராவிட் எப்படி தேசிய கிரிக்கெட் அகாடெமியின் கிரிக்கெட் தலைமை பதவி வகிக்க முடியும்’ என்று உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் நீதிபதி டி. கே. ஜெயின் தரப்பில் ராகுல் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக கமிட்டி உறுப்பினர் (சிஓஏ) ரவி தோக்டே கூறுைகயில், ‘ராகுல் டிராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை.

இனி, டி,கே. ஜெயின்தான் முடிவெடுக்க வேண்டும். எங்களைக் கேட்டால் நாங்கள் டிராவிட்டுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டோம் என்று தெரிவிப்போம்.

டிகே. ஜெயின் இரட்டைப்பதவி நலன் இருக்கிறது என்றால், நாங்கள் எங்கள் பதிலை அவர்களுக்கு அளிப்போம்’’ என தெரிவித்தார்.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பு அதிகாரி கூறுகையில், ‘தேசிய கிரிக்கெட் அகாடமி பணியில் டிராவிட் பணி அமர்த்தப்பட்ட போது இந்தியா சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து சம்பளம் இல்லாத விடுப்புக்கு டிராவிட் இந்தியா சிமென்ட் நிறுவனத்திடம் கோரியுள்ளார்.

எனவே, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை’ என்றார்.

.

மூலக்கதை