நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் ? : உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

தினகரன்  தினகரன்
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் ? : உயர்நீதிமன்றக் கிளை கேள்வி

மதுரை :  நீர்நிலை ஆக்கிரமிப்பு புகார்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையா? என்று உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றகோரும் வழக்குகளே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிகமாக விசாரணைக்கு வருகின்றன என்றும் விசாரணையின் போது நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கரூர் முதலைப்பட்டியில், குளத்தில் உள்ள கோவில்பாதை உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கரூர் இரட்டைக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய சாட்சிகளிடம் கீழமை நீதிமன்ற நீதிபதி முன் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை