இந்திய வீரர்கள் ‘ஜாலி’ | ஆகஸ்ட் 13, 2019

தினமலர்  தினமலர்
இந்திய வீரர்கள் ‘ஜாலி’ | ஆகஸ்ட் 13, 2019

 டிரினிடாட்: விண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், மயங்க் அகர்வால் உள்ளிட்ட வீரர்கள் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டி முடிவில் இந்திய அணி 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இம்மகிழ்ச்சியில் உள்ள இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ரிஷாப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி, கலீல் அகமது மற்றும் சகா உள்ளிட்டோர், அங்குள்ள டிரினிடாட் ஆற்றுக்கு சென்றனர்.

இவர்களுடன் விண்டீஸ் ‘டுவென்டி–20’ அணி ‘ஆல் ரவுண்டர்’ போலார்டும் இணைந்து கொண்டார். கரை ஓரம் இருந்த மரங்களில் கயிறு கட்டி அப்படியே அந்தரத்தில் விளையாடி நீரில் குதித்து மகிழ்ந்தனர்.

தவான், மயங்க் அகர்வால் இருவரும் படகின் விளிம்பில் நின்று, ‘ரிவர்ஸ் டைவ்’ அடித்து, ஆற்றில் குதித்து கரை சேர்ந்தனர். இதுகுறித்த வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பீச்சில் சகால்

சுழற்பந்து வீச்சாளர்கள் சகால், குல்தீப் இருவரும் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள பிரபலமான மரகாஸ் பீச் சென்றனர். அங்கு ரப்பர் ஸ்டம்சை வைத்து, பந்தை எறிந்து விளையாடினர்.

மூலக்கதை