வசதி செய்து தர தமிழக அரசு மறுப்பதால் ‘எல்லாரும் குஜராத் போகலாம்’: கோவை தொழில் துறையினர் ஆவேசம்

தினகரன்  தினகரன்
வசதி செய்து தர தமிழக அரசு மறுப்பதால் ‘எல்லாரும் குஜராத் போகலாம்’: கோவை தொழில் துறையினர் ஆவேசம்

கோவை: கோவை மாவட்டத்தில் தொழில்துறையினருக்கு எந்த வசதியும் செய்து தர மறுப்பதால், எல்லோரும் குஜராத் மாநிலம் போகலாம் என தொழில் துறையினர் ஆவேசமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழில் துறையினருக்கான குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய  அதிகாரிகள், சிறு,குறு தொழில் அமைப்பினர், சைமா, சீமா, கொடிசியா, கொசிமா, சிட்ேகா, காட்மா உட்பட பல்வேறு தொழில் அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொழில் துறையினர் பேசியதாவது: பம்புசெட் மோட்டார் தொழில் கோவை மாவட்டத்தில் உச்சத்தில் இருந்தது. நாட்டின்  மொத்த உற்பத்தியில் கோவையின் பங்களிப்பு 80 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக தற்போது  குறைந்துள்ளது. இந்த தொழிலில் குஜராத் நம்மை விட வேகமாக முன்னேறி வருகிறது. தொழில் நிறுவனங்களுக்காக பெறப்பட்ட இடங்கள் நில வகைப்பாடு செய்ய இயலாத நிலையில் உள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு குழப்பம் இருக்கிறது. கம்ப்ரசர் தொழிலில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், தொழில் செய்ய முடியாத நிலையுள்ளது. ரெட் லெவல் நிறுவனங்களின் ஆர்டர் பெற்று இயங்கும்  குறு தொழில் நிறுவனங்களுக்கு மாசு வாரியத்தினர் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். இது ஏற்க கூடியதல்ல. சிஎன்சி மெசின் இயக்கத்தினால் ஒலி மாசு ஏற்படாது. ஆனால் இருகூர் பேரூராட்சி நிர்வாகம் சிஎன்சி மெசின் இயக்கிய நிறுவனத்தை  மூட நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறு பிரச்னைகளுக்கு கூட தீர்வு காணாமல் தொழில் நிறுவனத்தை மூட நெருக்கடி கொடுக்கிறார்கள்.  மின் தடை அவ்வப்போது தொடர்கிறது. ஓரிரு நாளில் சரியாகி விடும் என மின் வாரியத்தினர் காலம் கடத்துகிறார்கள். விரைவாக நடவடிக்கை எடுக்காததால் ஜெனரேட்டர் பயன்படுத்தவேண்டியுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்களுக்கு  இழப்பு அதிகமாகி வருகிறது. மின் இணைப்பு வழங்குவதிலும், மின் குறைபாடுகளை சரி செய்வதிலும் அலட்சியம் நீடிக்கிறது. சிட்கோ உட்பட பல்வேறு தொழிற்சாலை பகுதிகளில் குடிநீர், மின் விளக்கு, ரோடு வசதி செய்யப்படவில்லை. கிணத்துக்கடவு செலவம்பாளையம் பகுதியில் 42 ஏக்கரில் தொழிற்சாலை பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொழிற்சாலை மண்டலம் உருவாக்கும் திட்டமும் தாமதமாகி வருகிறது. தொழிற்சாலை பகுதியில்  குடியிருப்புகளுக்கு அதிகளவு அனுமதி வழங்கப்படுகிறது. குடியிருப்புகள் வந்த பின்னர் தொழிற்சாலைகளை மூட ெசால்கிறார்கள். இதே நிலை நீடித்தால் கோவை மாவட்ட தொழில் துறையினர் எல்லோரும் குஜராத்திற்கு போகவேண்டிய  நிலை ஏற்படும். குஜராத்தில் தொழில் துவங்க ஒற்றை சாளர முறையில் விரைவாக அனுமதி வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் ெதாழில் துறையினர் பிரச்னையை தீர்க்கவில்லை.இவ்வாறு அவர்கள் பேசினார்.

மூலக்கதை