மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக குறைவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாகவும், நீர் இருப்பு 75.25 டிஎம்சியாக உள்ளது.

மூலக்கதை