கல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி- சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி சென்னையில் 7ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்!

‘கல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கான பயிற்சி சிறப்பு வகுப்புகள் வருகிற 7-ந்தேதி முதல்  சென்னையில் தொடங்குகிறது‘, என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ச.வீரபாபு தெரிவித்தார்.

இது குறித்து அவர்  மேலும் கூறியதாவது:-

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமிபோட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதிலும் திறமை மிக்க மாணவர்களை அதிகாரிகளாக்கி தனி அடையாளம் தருவதிலும் தமிழகத்தின் தலைசிறந்த மையமாக கடந்த 13 ஆண்டுகளாக வெற்றி நடை போட்டு வருகிறது. 

ஆட்சித்த மிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி. பயிற்சி மையத்தில் படித்த எண்ணற்றோர் அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக  அலங்கரிக்கின்றனர். 

இந்த நிலையில் மத்திய அரசு  பணியாளர் தேர்வாணையம்  (யு.பி.எஸ்.சி) நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அரசின் உயரிய  பணியிடங்களுக்கான இந்திய குடிமைப்பணி தேர்வையொட்டி, சிறப்பு பயிற்சி வகுப்புகளை ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி முன்னெடுத்திருக்கிறது.

கல்லூரி மாணவர்களுக்காக மாலை நேர ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளோம். வருகிற 7-ந்தேதி முதல் இ ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.  முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு மூன்றாண்டு பயிற்சி நடைபெறும். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சியும், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.

தலைசிறந்த ஆசிரியர் குழுமுதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் சிறந்த  பயிற்சி மையமான எங்கள் மையத்தின் தலைசிறந்த ஆசிரியர் குழுவால் இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. 

மேலும் போட்டி தேர்வு  குறித்த அனைத்து பாடத்திட்டங்களும் மாணவர்களுக்கு முறையாக கொடுக்கப்பட உள்ளது.எங்கள் நோக்கமே கல்லூரி படிப்பை முடித்த நேரத்தில் ஐ.ஏ.எஸ். பயிற்சியையும் முடித்து மாணவர்கள் முக்கியமான மன நிலையை  எட்ட வேண்டும், இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் சாதித்து அரசுத் துறைகளில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது தான்.

இந்திய ஆட்சி பணி தேர்வு எனும் இலக்கை எட்டிப்பிடிக்க மாணவர்களுக்கு ஊன்றுகோலாக இருந்து வரும் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமி  தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பயிற்சி வழங்கப்பட இருக்கின்றன. 
இந்திய ஆட்சி பணி  தேர்வுக்கு தேவையான என்.சி.இ.ஆர்.டி உள்ளிட்ட ஆங் கில வழி புத்தகங்கள் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன.

 தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு ஏதுவான  அனைத்து பாடத்திட்டங்களும் தமிழிலேயே தயார் செய்து வழங்கப்பட இருக்கின்றன.

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் தலைமை அலுவலகமான  குரோம்பேட்டை மற்றும் செங்கல்பட்டு என்ற இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. 

எனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தவிர  வெளியூர் மாணவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும் விடுதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இரு க்கிறது. முன்பதிவு செய்யலாம்

இந்த பயிற்சி வகுப்புகள் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். எனவே பயிற்சி வகுப்பில் சேர விரும்பும்  மாணவர்கள் collegeIAS என டைப் செய்து  தங்கள் பெயர், முழு முகவரியுடன் 7550151585 என்ற எண்ணுக்கு  எஸ்.எம்.எஸ். அனுப்பி தங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9941937976, 9092538538 என்ற  எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குனர் ச.வீரபாபு தெரிவித்தார். http://aatchitamil.com/ எனும் வெப் தளத்தில் விவரங்கள் அறியலாம்.

மூலக்கதை