டிரம்புக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

தினமலர்  தினமலர்
டிரம்புக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

கராகஸ்: பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெனிசுலாவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் குவைடோ, தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. இதையடுத்து மதுரோ, அமெரிக்காவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டார். வெனிசுலாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள வெனிசுலா அரசு சொத்துக்கள் அனைத்தையும் முடக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்க தடையால் வெனிசுலாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் எக்கச்சக்கமாக விலை உயர்ந்துள்ளன. மக்கள் அன்றாட வாழ்விற்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து டிரம்புக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. கையெழுத்து பெற்ற இந்த கடிதங்கள் அடுத்த மாதம் நடைபெறும் ஆண்டுக்கூட்டத்தில் ஐ.நா.,வில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

மூலக்கதை