செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்களை கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
செவ்வாய் கிரகத்தில் களிமண் தாதுக்களை கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது!

செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர், பண்டைக்காலத்தில் நீரோடைகள் மற்றும் ஏரிகள் நிறைந்த பகுதியில் களிமண் தாதுக்களை கண்டறிந்து ஆராய்ச்சி செய்கிறது.

நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது,

அதன் பின்னர், அது ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பி உள்ளது, 13 மைல்கள் சுற்றித் திரிந்து 1,207 அடி  உயரம் ஏறி அது தற்போது ஷார்ப் மவுண்டின் பக்கவாட்டில் உள்ளது. 

இது கேல் பள்ளத்தின் உள்ளே அமைந்துள்ளது, அங்கு ஒரு காலத்தில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீரோடைகள் மற்றும் ஏரிகள்  இருந்து உள்ளன.

கேல் கேட்டர் ஒரு பரந்த மற்றும் வறண்ட பண்டைய ஏரிப் படுக்கையாகும், அதன் மையத்தில் 16,404 அடி உயரமுள்ள மலை உள்ளது. மவுண்ட் ஷார்ப் சிகரம் பள்ளத்தின் விளிம்பை விட உயரமாக உள்ளது.
கியூரியாசிட்டி அந்த பகுதியில் களிமண் தாதுக்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது மேற்பரப்பின் 22 மாதிரிகளை துளையிட்டு  எடுத்து உள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வாளர்  கிறிஸ்டன் பென்னட் கூறுகையில், "நாங்கள் 10 ஆண்டுகளாக இந்த பகுதியின் சுற்றுப்பாதை படங்களை ஆய்வுச் செய்து வருகிறோம், இறுதியாக நாங்கள் தற்போது இதனை நெருக்கமாகப் பார்க்க முடிகிறது என கூறினார்.

கியூரியாசிட்டி தனது பணியின் போது, ஷார்ப் மலையில் அதிக அளவு களிமண் தாதுக்களை ஆய்வு செய்தது. கியூரியாசிட்டி செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டரால் இந்த தாதுக்கள் முதலில் அங்கு இருப்பது கண்டறியப்பட்டன.

சமீபத்தில், ரோவரின் கேமரா டீல் ரிட்ஜ் வெளிப்புறம் மற்றும் ஸ்ட்ராத்டன் ஆகியவற்றின் பனோரமாவைப் படம் பிடித்தது, இது அலை, வண்டல் அடுக்குகளைக் கொண்டது, இது காற்று, நீர் அல்லது இரண்டாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

"இந்த பாறைகளில் பதிவு செய்யப்பட்ட பண்டைய ஏரி சூழலில் ஒரு பரிணாம வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்" என்று கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  களிமண் ஆய்வு  இணைத் தலைவரான வலேரி ஃபாக்ஸ் கூறினார்.

மூலக்கதை