3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி

தினமலர்  தினமலர்
3 இன் 1, வீட்டிலேயே சினிமா... : ஜியோவின் அடுத்த அதிரடி

மும்பை : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெறும் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் துவங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42 வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் இன்று (ஆக.,12) நடைபெற்றது. இதில் பேசிய முகேஷ் அம்பானி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நெட்வொர்க் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது. ஜியோ 340 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நெட்வொர்க் நிறுவனம் என்ற பெயரை ஜியோ பெற்றுள்ளது. எண்ணெய் வர்த்தக துறையில் சவுதி அரேபியா அரசு நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது என்றார்.

ஜிகா பைபர் பிராட்பேண்ட் சிறப்பம்சங்கள்

* ஹோம் பிராட்பேண்ட் சேவை இணைப்பு அறிமுகம்

* டிவி மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் வீடியோ கால் பேசலாம்.

* ஜியோ பைபரில் இணையதள வேகம் நொடிக்கு 1 ஜிபி.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* ஆன்லைன் ஷாப்பிங் முறையில் விர்ச்சுவலாக உடைகளை அணிந்து தேர்வு செய்யலாம்.

* ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது.

* ஜியோ பைபர் செப்.,5 முதல் அறிமுகம்

* ஜியோ பைபர் தொடக்க சலுகையாக 4 K TV மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசம். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது.

* தியேட்டர்களில் ஒரு சினிமா ரிலீசாகும் அதே நேரம் உங்கள் வீட்டில் இருந்தே ஜியோ பைபர் மூலம் அதே சினிமா பார்க்கலாம். இதை ஜியோ முதல்நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம். இத்திட்டம் வரும் 2020 ம் ஆண்டு முதல் அறிமுகம்.

* ஜியோ பைபர் சேவை மாதம் ரூ.700 முதல் 10,000 வரை சந்தா தொகையாகும்.

* ஹோம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு வாய்ஸ்கால் முற்றிலும் இலவசம். நொடிக்கு 100 எம்.பி., இணையவேகத்தில் ஜியோ பைபரின் திட்டம் உள்ளது.

* இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் தொடங்கப்பட்டுள்ளது.

* காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

மூலக்கதை